tamilnadu

img

சாதாரண மக்கள் கையில் பணத்தைக் கொடுங்கள்... பொருளாதார சுழற்சிக்கு அதுதான் வழி

கொல்கத்தா:
சாதாரண மக்களின் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும்; ஏனெனில் அவர்கள்தான் பொருளாதாரத்தை இயக்குகின்றனர் என்றும் ‘நோபல் பரிசு’பெற்ற பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
வங்கமொழி செய்தித் தொலைக் காட்சிக்கு அபிஜித் பானர்ஜி பேட்டி அளித்துள்ளார். அதில் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா நிவாரணத்துக்காக உலகநாடுகள் தங்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி-யில் ஒரு கணிசமான பங்கை ஒதுக்குகின்றனர். ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து விட்டது. அவர்களிடம் பணம் இல்லை. எனவே, மக்களிடம் பணத்தை அளிக்க வேண்டும். ஏனெனில் சாமானிய மக்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துகின்றனர். பணக்காரர்கள் அல்ல.வெளிமாநிலத் தொழிலாளர்கள் பல மாநிலங்களைக் கடந்து தங்கள் சொந்தஊர் செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அளித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. 3 முதல் 6 மாத காலங்களுக்கு அவர்களிடம் எமர்ஜென்சி ரேசன் அட்டைகளை அளிக்க வேண்டும்.

சமூக விலகலுடன் பொருளாதாரத்தையும் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கானகட்டத்தை நோக்கி நாம் இன்னும் செல்லவில்லை.இந்தியாவில் கொரோனா பாதிப்பு பற்றி தெரியவில்லை. காரணம் இன்னும் பெருமளவு மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படவில்லை. ஊரடங்கைத் தளர்த்தும் முன் நிறைய பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். பரிசோதனைகள் அதிகரிக்க அதிகரிக்கத்தான் மரண விகிதங்கள் குறையும்.இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக சீனாவிலிருந்து வெளியேறும் வர்த்தகங்கள், தொழில்கள், பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா பயனடையும் என்றுகூறப்படுவதற்கு பற்றியும் அபிஜித் பானர்ஜிபதிலளித்துள்ளார்.“கொரோனா பெருவெடிப்புக்கு சீனாதான் காரணம் என்று குற்றம்சாட்டப் படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறும் நிறுவனங்களால் இந்தியா பயன்பெறும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால்அதில் உண்மையில்லை.சீனா தனது கரன்சியான ‘யுவான்’ மதிப்பைக் குறைத்து விட்டால், சீனப்பொருட்கள் மலிவாகி விடும். அப்போதுஉலக நாடுகள் மீண்டும் அவர்களிடமிருந்துதான் பொருட்களை வாங்குவார்கள்” என்று அபிஜித் குறிப்பிட்டுள்ளார்.

;