tamilnadu

img

ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிகளவு கனமழைக்கு எச்சரிக்கை...  

கொல்கத்தா 
தென்மேற்கு பருவமழை பெரும்பாலான இந்திய மாநிலங்களை மிரட்டி வருகிறது. தமிழகத்தில் லேசான அளவில் மழை பொழிந்தாலும் வட இந்திய மாநிலங்களை இடி, மின்னலுடன் புரட்டியெடுத்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இந்நிலையில், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிகளவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து விரிவான தகவலில்," வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை என 3 நாட்கள் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவில் 24-26 ஆம் தேதி வரை 3 நாட்களும் பெரும்பாலன இடங்களில் மிக அதிகளவில் கனமழை பெய்யும் எனவும், 25 -26-ஆம் தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 26-ஆம் தேதி மட்டும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மிக அதிகளவு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24  மணி நேரத்தில், பீகார், மேற்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தெற்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;