tamilnadu

img

தேர்தலைச் சந்திக்காமலேயே மேற்குவங்கத்தில் ஆட்சி? மம்தா கட்சியின் 100 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைகிறார்கள்?

மேற்குவங்க மாநிலத்தில், சாரதாசிட்பண்ட் ஊழலில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை, ஒவ்வொருவராக மிரட்டி பாஜக தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்காமலேயே மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க ‘மெகா திட்டம்’ ஒன்றையும் அக்கட்சி தீட்டியுள்ளதாக செய்திகள் வெளி

யாகியுள்ளன.இதன்படி திரிணாமுல் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த 100 எம்எல்ஏ-க்களை கொத்தாக பாஜக-வில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, அண்மையில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்த அர்ஜூன் சிங் கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ-வும், அக்கட்சியின் மூத்த தலைவருமாக இருந்தவர் அர்ஜூன் சிங். அண்மையில்தான் பாஜக-வில் இணைந்தார். அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பும் வழங்கியுள்ளது. இந்நிலையில்தான் அர்ஜூன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திரிணாமுல் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். 100 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். அவர்கள் பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிலர் தேர்தலுக்கு முன்பே கூட இணையக்கூடும். மேலும் வேறு சிலர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இணையலாம். இதனால் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தாமலேயே பாஜக ஆட்சியை கைப்பற்ற வாய்ப் புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.2016-இல் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

;