tamilnadu

img

வீரேந்திர குமார் எம்.பி காலமானார்....

திருவனந்தபுரம்:
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல சோசலிஸ்ட் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.வீரேந்திரகுமார் (83) காலமானார். மாரடைப்பைத் தொடர்ந்து கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழனன்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். வெள்ளியன்று வயநாடு கல்பற்றயில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாத்ருபூமி ஊடக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் வீரேந்திர குமார் இருந்து வந்தார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள திகம்பர் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 முதல் 2019 வரை மத்திய அமைச்சராகவும் செயல்பட்டார். தேசிய சர்வதேசிய அளவில் ஊடகத்துறையின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 

ஊடக சுதந்திர போராளி
எம்.பி.வீரேந்திர குமார் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஊடக சுதந்திரத்துக்காக சமரசமற்ற நிலைப்பாட்டை உறுதியாக பற்றி நின்றார் என தெரிவித்துள்ளார். பன்மொழித்திறன் கொண்ட எழுத்தாளர், எந்த பிரச்சனையையும் ஆழமாக அலசும் தலைவர். அண்மையில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளின் பகுதியாக நடந்த எம்பி, எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்று மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். மக்களைப் பிளவுபடுத்தி நாட்டின் ஒற்றுமையைக் குலைத்த வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக கடைசி தருணம் வரை இடைவிடாமல் போராடிய ஒரு தலைவராக அவர் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார். கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், தேசாபிமானி முதன்மை ஆசிரியர் பி.ராஜீவ் ஆகியோரும் எம்.பி.வீரேந்திர குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;