tamilnadu

img

பொய் பிரச்சாரங்களும், கபட நாடகங்களும் தகரும் எல்டிஎப் பெரும் வெற்றி பெறும் கொடியேரி பாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம், ஏப்.22-ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் நடத்தும் பொய் பிரச்சாரங்களையும், கபட நாடகங்களையும் கேரள மக்கள் புறந்தள்ளி எல்டிஎப்-க்கு பெரும் வெற்றியை அளிப்பார்கள் என சிபிஎம் கேரள மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்காளர்களை ஏமாற்றஎந்த கபட நாடகத்தையும் அரங்கேற்ற யுடிஎப்-க்கும் பாஜக வுக்கும் தயக்கமில்லை என்பது கலாச கொட்டுக்கு இடையே நடந்துள்ள சம்பவங்கள் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆலத்தூரில் யுடிஎப் வேட்பாளர் மீது கல்லெறியப்பட்டதாகவும், வேளியில் ஏ.கே.அந்தோணியின் ரோடு ஷோதடுக்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எல்டிஎப்-க்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டாலும், உண்மை வெகுவிரைவாக வெளிவந்துள்ளது. ஆலத்தூரில் கொட்டி கலாசத்தில் கல்லெறிந்தது காங்கிரஸ் கட்சி ஊழியர்கள் என்பதற்கான காட்சிகள் வெளியாகியுள்ளன. யுடிஎப்பிரச்சார வாகனத்தின் பின்புறத்திலிருந்து கல்லெறி நடந்தது. ‘சதிக்காதீர்கள்’ என அனில் அங்கரா எம்எல்ஏகூக்குரலிட்டு கல்லெறிந்த தனது கட்சிக்காரர்களிடம் வேண்டுவது வீடியோ காட்சியுடன் வெளியாகி உள்ளது.எல்டிஎப் ஊழியர்களை குறிவைத்து கல்மழை பொழிந்துவிட்டு யுடிஎப் வேட்பாளர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தது எல்டிஎப்-ஐ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவதற்கான கபட நாடகத்தின் பகுதியாகும்.திருவனந்தபுரம் வேளியில் ஏ.கே.அந்தோணியையும் சசி தரூரையும் ரோடு ஷோவின்போது எல்டிஎப் தடுத்ததாக கூறுவதில் உண்மை இல்லை.


அந்தோணியைப் போன்ற ஒரு தலைவர் பொய் கூறி வாக்காளர்களை நம்பவைத்து ஆதாயம் பெறும் அரசியல்நடவடிக்கை நல்லதல்ல. எல்டிஎப், யுடிஎப் ரோடு ஷோக்கள் நேருக்குநேர் சந்தித்தபோது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே பிரச்சனை. போக்குவரத்து நெரிசல் விலக்கி அந்தோணியின் வாகனத்தை நகர்த்திவிட எல்டிஎப் தலைவர்கள் முயற்சித்தபோது அந்தோணியும் அவருடன் இருந்தவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றனர். நகைப்புக்குரிய பொய் பிரச்சாரத்துக்கு தலைமைதாங்கும் பணியையே பின்னர் அந்தோணி மேற்கொண்டார்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எல்டிஎப் ஊழியர்களுக்கு எதிராக வன்முறைகளை யுடிஎப்-ம் பாஜகவும் கட்டவிழ்த்து விட்டன. அம்பலப்புழயில் கோயில் பார்வையாளர் மண்டபத்தை தகர்த்து கலவரம் ஏற்படுத்த பாஜக முயன்றது. பத்துக்கும் மேற்பட்ட எல்டிஎப் ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. சிஐடியு ஊழியர்களின் வாகனங்கள் தகர்க்கப்பட்டன. சிபிஐமண்டல கமிட்டி அலுவலக கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. காவல்துறையினருக்கும் ஆர்எஸ்எஸ் நடத்திய தாக்குதலில் காயம் ஏற்பட்டது. தானூரில் பி.வி.அன்வரின் கடற்கரை பகுதி ரோடு ஷோவுக்கு எதிராக முஸ்லிம்லீக் தலைமையில் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். யுடிஎப்-ம் பாஜகவும் நடத்தும் ஆத்திரமூட்டல்களுக்கு இடம் தராமல் வாக்களிப்புக்கான நடவடிக்கைகளில் முன்னோக்கி செல்லுமாறு அனைத்து எல்டிஎப் ஊழியர்களையும், ஆதரவாளர்களையும் அறிக்கையின் மூலம் கொடியேரி பாலகிருஷ்ணன் கேட்டுக்க்கொண்டுள்ளார்.

;