tamilnadu

img

சுகாதாரம், சுற்றுலா, ஐடி துறைகளில் ஓமன் நாட்டுடன் கூடுதல் ஒத்துழைப்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம், ஜுலை 8- சுகாதாரம், சுற்றுலா ஐடி துறை களில் ஓமன் நாட்டுடன் கூடுதல் ஒத்து ழைப்பு குறித்து அந்நாட்டின் தூதர் முன மகாபர், கேரள முதல்வர் பினராயி விஜ யனுடன் திங்களன்று விவாதித்தார்.  ஓமனில் உள்ள வெளிநாட்டவரில் மிக அதிக எண்ணிக்கையில் மலை யாளிகள் உள்ளனர். எனவே மலை யாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் பயனுள்ள தலையீடுகள் தேவை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சனை யில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தூதர் உறுதிஅளித்தார். ஓமனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தியர்கள் குறிப்பாக மலையாளிகள் வகித்து வரும் பங்கு மிகப்பெரியது. சுற்றுலா, சுகாதாரம், தகவல் தொடர்பு துறை களில் இந்தியா பெற்றுள்ள முன் னேற்றத்தின் பின்புலத்தில் ஒத்து ழைப்பு சாத்தியமானது. அதை மேலும்  அதிகரிப்பது இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கும். இந்த துறைகளில் கேரளம் மிகுந்த முன்னேற்றம் கண்டுள் ளது. எனவே, இந்த துறைகளில் மிகுந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத் தும் நடவடிக்கைகளை ஓமன் இந்திய தூதரகத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

;