tamilnadu

img

மக்களை காக்க 2.3 லட்சம் இளைஞர் படை

கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

புதிதாக 19 பேருக்கு கோவிட்

கேரளத்தில் கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. வியாழனன்று மட்டும் புதிதாக 19 பேரிடம் நோய் கண்டறியப்பட்டது. இதில் கண்ணூர் மாவட்டத்தில் 9 பேர். காசர்கோடு, மலப்புறம் மாவட்டங்களில் தலா மூவர், திரிச்சூரில் இருவர், இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் தலா ஒருவர். எர்ணாகுளத்தில் சிகிச்சை பெற்றுவந்த கண்ணூரைச் சேர்ந்த மூவரும், வெளிநாட்டினர் இருவரும் நோய் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

திருவனந்தபுரம், மார்ச் 27- குடும்ப அட்டை இல்லாதோருக்கும் ரேசன் கடைகள் மூலம் ஆதார் அட்டையை ஆய்வு செய்து, வேறு குடும்ப அட்டையில் பெயர் இல்லாதவர் என்பதை உறுதி செய்து உணவு தானியம் வழங்கப்படும் எனவும். கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  கோவிட் 19 பாதிப்பு மற்றும் நிவாரண நட வடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத் திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:திருவனந்தபுரம், மார்ச் 27- குடும்ப அட்டை இல்லாதோருக்கும் ரேசன் கடைகள் மூலம் ஆதார் அட்டையை ஆய்வு செய்து, வேறு குடும்ப அட்டையில் பெயர் இல்லாதவர் என்பதை உறுதி செய்து உணவு தானியம் வழங்கப்படும் எனவும். கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  கோவிட் 19 பாதிப்பு மற்றும் நிவாரண நட வடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத் திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

வெள்ளி (மார்ச் 27) முதல் சமூக பாது காப்பு ஓய்யூதியம் வழங்கப்படும். மக்களைப் பாதுகாக்கும் பணிகளுக்காக 2,36,000 இளை ஞர்கள் கொண்ட தன்னார்வ படை அமைக்கப் படும். இதில் பணியாற்ற விரும்புவோர் ‘சந் நந்தம்’ என்கிற வெப் போர்ட்டல் வழியாக பதிவு செய்யலாம். பஞ்சாயத்து அளவில் 200 பேர் கொண்ட படையை உருவாக்கு வதற்கான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள் ளன. இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். 

பத்தனம்திட்டாவில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு கோவிட் 19 பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை வந்துள்ளது. தற்போது 1,20,003 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,00,402 பேர் வீடுகளிலும், 602 பேர் மருத்துவ மனைகளிலும் உள்ளனர். வியாழனன்று 136 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 10,342 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் 3768 மாதிரிகளில் நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் அறிவித்த கோவிட் நிவாரணத் தொகுப்பை வரவேற்பதாகவும் முதல்வர் கூறினார். கோவிட் அச்சுறுத்தல் எத்தனை கடுமையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. அரசு மருத்துவ மனைகள் மட்டுமல்லாமல் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் அரசு பயன் படுத்தும். 1465 இளம் தொண்டர்களை மருத்து வமனைகளில் தனிமையில் உள்ளோருக்கு துணையாக அமர்த்த இளைஞர் ஆணையம் தயாராக உள்ளது. புதன் ஒரே நாளில் இத்த னைபேரும் கண்டறியப்பட்டனர். தன்னார்வ படையுடன் இணைந்து இவர்கள் செயல்படு வார்கள். இவர்களும் சந்நந்தம் போர்ட்டல் மூல மாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். 

நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும். இது குறித்த புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவிட் தடுப்பு சுகாதார ஊழியர்களுக்கான போக்கு வரத்து வசதியை கேஎஸ்ஆர்டிசி மேற்கொள் ளும். மார்ச் 31இல் காலாவதியாகும் பிஎஸ் 4 வாகனங்களின் பதிவுக்கு கால நீ்ட்டிப்பு செய்ய மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு அல்லாத புதிய வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் விதிக்கப் பட்ட வரி உயர்வு தற்காலிக பதிவு செய்த வாக னங்களுக்கு பொருந்தாது எனவும் முதல்வர் தெரிவித்தார். 

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு உரிமம் பெறுவதிலி ருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கேர ளத்திற்கு வெளியே மற்ற மாநிலங்களில் உள்ள மலையாளிகள் அவர்களது கவலையை தெரி விக்கிறார்கள். யாரும் உறவினர்கள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என முதல்வர் கூறினார். 

வெளி மாநில தொழிலாளர்களை துரத்தி விடுவதல்ல, அவர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் செய்ய வேண்டும். இதில் உரிய தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் சில இடங்களில் எல்லை மீறியதாக அதிருப்தி எழுந்துள்ளது. அத்தகைய அணுகுமுறையை கையாண்டால் சிறப்பாக பணியாற்றுவோரும் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, அதுபோன்ற செயலை கைவிட வேண்டும்  என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகா தாரத்துறையில் உள்ளவர்கள் தங்களது சுய பாதுகாப்பையும் கவனித்துக்கொள்ள வேண் டும். பொதுமக்களோடு தொடர்பில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும். உணவும் அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்வதை தடுக்கக் கூடாது. திறந்து வைக் கும் கடைகளில் பேக்கரிகளும் அடங்கும். மருத்துகளை மொத்தமாக விற்பனை செய் யும் கடைகள் திறந்து செயல்பட தேவையான வசதி செய்யப்படும் எனவும் முதல்வர் கூறி னார்.