tamilnadu

img

மணநாளுக்கு முதல்நாள் கணவர் உயிரிழப்பு...

துபாய்:
துபாயிலிருந்து  வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தனதுகணவர் சரிந்து விழுந்து உயிரிழந்ததை கண்ணீர் மல்க பார்த்த பெண்  கேரள அரசு, மத்திய அரசின்முயற்சியால் சொந்த ஊர் திரும்பி யுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்தவர் பிஜூமோள் (37). இவரது கணவர் ஸ்ரீஜித்எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கணவர் மற்றும் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றவும், படிக்கவைக்கவும் வேண்டும் என்றவைராக்கியத்தில் பிஜூமோள் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுள் ளார். ஒரு புரோக்கரிடம் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவர்ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான பணியை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். துபாய் சென்றபிறகு பிஜூ-வை ஒரு மசாஜ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் புரோக்கர்.

தாம் கற்றுக்கொண்ட ஆயுர்வேதசிகிச்சை மசாஜ் வேலைக்கல்ல என முடிவு செய்த பிஜூ மூன்று நாட்கள் மட்டுமே சென்றுவிட்டு நின்றுவிட்டார்.இந்த நிலையில் அவரை துபாய்க்கு அழைத்துவந்த புரோக்கரையும் கண்டறியமுடியவில்லை. இதையடுத்து தனது தோழியின் அறையில் தங்கி வேலை தேடிவந்துள்ளார். இதற்கிடையில்  பிஜூ விசா முடிந்துவிட்டது. இவரை தங்கவைத்த தோழியும் ஊருக்குச் சென்றுவிட்டார்.இந்தத் தருணத்தில் கொரோனா தொற்றால் இந்தியாவில் ஊரடங்குபிறப்பிக்கப்பட்டது. இதனால் பிஜூவால் உடனடியாக கேரளம் திரும்பமுடியவில்லை. இந்தச் சூழலில் மார்ச் 23-ஆம் தேதி பிஜூ-ஸ்ரீஜித் திருமணநாள்.  இதற்கு முதல் நாள் பிஜூ தனது கணவருடன் வீடியோகாலில் பேசிக்கொண்டி ருந்துள்ளார். அப்போது திடீரென ஸ்ரீஜித் சக்கர நாற்காலியி லிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்.கணவரின் இறுதிச்சடங்கையும் வீடியோவிலேயே பார்த்தார்.

முதல்வர், அமைச்சர் தலையீடு
இந்தத் தகவலறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரமற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா மற்றும் நோர்கா ரூட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் தலையிட்டு பிஜூவின் குடும்பத்தை அரவணைத்துள்ளனர். பிஜூ-வின் குழந்தைகளை உடனடியாக அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் இந்திய தூதரகம், மத்தியஅரசின் உதவியோடு பிஜூ கேரளம் மாநிலம் கொச்சிக்கு வியாழக்கிழமை திரும்பிவிட்டார்.இது குறித்து பிஜூ கூறுகையில், “எலும்பு புற்று நோயால் எனது கணவர் பாதிக்கப்பட்டார். அத்தோடு மஞ்சள் காமாலை ஏற்பட்டு மூளைச் செயல்பாடும் பாதிக்கப்பட்டது. என் கண் முன்னே எனது கணவர் உயிரிழந்ததை கண்ணீர் மல்க பார்த்தேன்’’ என்றார்.இருப்பினும் கொரோனா காலம் என்பதால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் அவர் தனிமைக்காலம் முடிந்தவுடன் தான் குழந்தை கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க முடியும்.

;