திருவனந்தபுரம், ஆக.9- கேரளத்தில் அச்சுறுத்தும் வகை யில் கோவிட் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. சனியன்று ஒரே நாளில் 1420 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட் டது. அதில் 1216 பேருக்கு தொடர்பு மூலம் பரவியுள்ளது. 92 பேருக்கு நோய் தொற்றி டம் தெரியவில்லை. கேரளத்தில் மிக அதிகபட்ச எண்ணிக்கையில் இன்று (ஆக.8) கோவிட் நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 60 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 108 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 30 பேர் சுகாதார ஊழியர்கள். சனியன்று 1715 பேர் குணமடைந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.