tamilnadu

img

காந்தி படுகொலையை நினைவு கூரும் கேரள பட்ஜெட் முகப்பு

திருவனந்தபுரம்:
கேரள சட்டமன்றத்தில் வெள்ளியன்று அம்மாநிலத்தின் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் சமர்ப்பித்தார். கேரள அரசின் நிதிநிலை அறிக்கையின் (பட்ஜெட்) முகப்பில் காந்தியின் மரணத்தை நினைவுகூரும் பிரபல ஓவியர் டாம் வட்டகுழியின் ‘காந்திஹிம்சா’ ஓவியம் இடம்பெற்றது. இந்த படத்தைப் பயன்படுத்த டாம் அனுமதி வழங்கியதற்காக நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் பட்ஜெட் உரையின் போது நன்றி தெரிவித்தார்.  

ஜனநாயகமும் சர்வாதிகாரமும் இந்தியாவில் எதிர் எதிராக நிற்பதாகக் கூறி தனது பட்ஜெட் உரையை தாமஸ் ஐசக் துவக்கினார். வெறுப்பின் மொழியை மட்டுமே பேசும் மத்திய ஆட்சியாளர்கள், வன்முறையும் இம்சையுமே தங்களது வழிமுறை என்று நம்புகின்ற, வகுப்புவாதத்திற்கு முற்றிலும் அடிபணியும் ஆட்சிமுறை. இதுவே இன்றைய இந்தியா என்று தாமஸ் ஐசக் குறிப்பிட்டார். குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடியுரிமை பதிவேடும் நாட்டில்ஏற்படுத்தியுள்ள கவலைகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. இன்று வரை இந்தியர்களாக வாழ்ந்தகிட்டத்தட்ட 19 லட்சம் அசாமியர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தடுப்பு முகாம் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த அச்சுறுத்தலை ஏற்க முடியாது. இந்தியாவை விட்டுத்தர முடியாது என்று சபதம் செய்துவீதிகளில் இறங்கிய இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். இந்திய அரசமைப்பு சாசனத்தின் சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. விடுதலை இந்திய வரலாற்றில்பெரும் கொந்தளிப்பான காலகட்டத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.உண்மை என்னவென்றால், இந்த போராட்டங்கள் அனைத்திலும் கேரளா உற்சாகமளித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, ஒற்றுமைக்கான ஒரு முன்னுதாரணத்தை கேரளா உருவாக்க வேண்டும் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

;