tamilnadu

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நீண்டகால பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை நீண்டகால பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பலதிட்டங்களுக்கு உடன்பட முடியாது என்பதும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பின ருடனும் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களுக்குப் பிறகுதான் இறுதி முடிவை எடுக்க முடியும் என்பது மாநிலத்தின் கருத்து என்றும்அவர் கூறினார்.

மாநிலத்தின் சூழ்நிலையையும் பரிசீலித்து சில மாற்றங்கள் தேவை என்கிறகருத்து தனியாக கூறப் பட்டுள்ளது. முக்கியமாக சுரங்க அனுமதிகளுடன் தொடர்புடையவற்றை கேரளம் சுட்டிக்காட்டுகிறது.  இடைநிலை வகை பி 1 ஐப் பொறுத்தவரை, ஐந்து ஹெக்டேருக்கும் நூறு ஹெக்டேருக்கும் இடையில் சுரங்க நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் போது சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படுகிறது. இதில் ஐந்து ஹெக்டேர் என்பதை இரண்டு ஹெக்டேராக திருத்தம் செய்யவேண்டும் என கேரளம் கோருகிறது. இதன்மூலம் இரண்டு ஹெக்டேருக்கு கீழ் உள்ள சிறிய தேவைகளுக்கு தற்போதுள்ள சலுகைகள் தொடரும். திட்டங்களுக்கான அனுமதிக்கு முன்பு பொதுக் கருத்து அறிவதற்கான கால அளவை 20 நாட்களாக சுருக்காமல் தற்போதுள்ள 30 நாட்களாக நீடிக்க வேண்டும்.

சிறிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள மாவட்டசுற்றுச்சூழல் தாக்கக் குழுக்கள் அமைக்கப்பட் டன. இது தவிர, மாநில அளவில் விண்ணப்பங்களை கையாளுவதில் மாவட்ட அளவிலான குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், இந்த குழுக்கள் வரைவு அறிவிப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான குழுக்களை மாநிலம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கேரளத்தின் கோரிக்கை என்றார்.

;