tamilnadu

img

மின் ஆட்டோ ‘நீம்ஜி’ கேரளத்தில் இயக்கம்... 4 மணிநேர மின்னூட்டத்தில் நூறு கி.மீ. செல்லும்

திருவனந்தபுரம்:
கேரள அரசு நிறுவனமான கேரள ஆட்டோமோபைல்ஸ் தயாரித்துள்ள மின்சாரத்தில் இயங்கும் ‘நீம்ஜி’ என்கிற மின் ஆட்டோக்கள் திங்களன்று இயங்கத் தொடங்கின.மின் ஆட்டோவின் முதல் இயக்கத்தை கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் திங்களன்று சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பிலிருந்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் இ.பி.ஜெயராஜன், ஏ.கே.சசீந்திரன், கே.ஏ.எல் நிறுவனத்தின்  தலைவர் கரமன ஹரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடந்த ஜுலை மாதம் முதல்வர் பினராயி விஜயன் மின் ஆட்டோ உற்பத்திக்கான பணியை நெய்யாற்றங்கரை அருகில் உள்ள கேரள ஆட்டோமொபெல் நிறுவனத்தில் (கேஏஎல்) துவக்கி வைத்தார். நான்கு மாதங்களில் மின் ஆட்டோ முழுமை பெற்று பயணத்தை துவக்கியுள்ளது. இது கேரளத்தின் இயற்கையை பாதுகாக்கும் மின்சார வாகன உற்பத்திக்கு தொடக்கமாகும். மின் ஆட்டோவின் விலை ரூ.2.8 லட்சமாகும். இதற்கு அரசு மானியத்துடன் குறைவான வட்டியில் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். முதல் கட்டமாக 15 ஆட்டோக்கள் முதல் கட்டமாக சாலைக்கு வருகிறது. இம்மாதம் நூறு ஆட்டோக்களும் அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஆயிரம் ஆட்டோக்களும் சாலைக்கு வரும். இதன் விற்பனையை தற்போது கேஏஎல் மேற்கொள்ளும். தொடர்ந்து விற்பனை முகவர்கள் மூலம் மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும்.

50 காசில் ஒரு கி.மீ
ஓட்டுநரும் 3 பயணிகளும் செல்லத்தக்க நீம்ஜி ஆட்டோ மற்ற ஆட்டோக்களைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மற்ற ஆட்டோவில் பயணம் செல்ல ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2 செலவாகும். ஆனால் மின் ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டருக்கு 50 காசுகள் மட்டுமே செலவாகும். பராமரிப்புசெலவும் குறைவு. சுமார் 4 மணி நேரத்தில்வீட்டிலிருந்தே பேட்டரிக்கு மின்னூட்டம் செய்துகொள்ளலாம். ஒருமுறை மின்னூட்டம் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் இயங்கும். விவசாயத்துக்கான மின்கட்டணம் நீம்ஜி ஆட்டோ மின்னூட்டத்துக்கு செலுத்தினால் போதும். 

;