இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த ஜமால் (70) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரானா தொற்று நோயால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னையிலிருந்து கீழக்கரை கொண்டுவரப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது துக்க நிகழ்வில் கலந்துகொண்ட இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், மற்றும் ஜமால் குடும்பதினர் உட்பட 100 பேரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்றுவருகிறது. இவர்களில் ஜமால் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தனிமைக்கு சென்றுவிட்டனர்.
கீழக்கரை பகுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பார்வையிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினர் உள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் குடியிருப்பிலிருந்து ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு பரிசோதனை நடைபெறவுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.