tamilnadu

img

மேலும் 94 பேருக்கு கோவிட்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் வியாழனன்று ஒரேநாளின் அதிகபட்ச எண்ணிக்கையில் 94 பேருக்கு நோய் உறுதியானது. இதில் 37 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 47 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 7 பேருக்கு தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்த பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சியம்மாள், அபுதாபியில் இருந்து வந்த மலப்புறத்தைச் சேர்ந்த ஒருவர், கொல்லத்தைச் சேர்ந்த சேவியர் ஆகியோர் உயிரிழந்தனர். மூவருக்கும் கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1588 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் 884 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,70,065 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 1,68,578 பேர் வீடுகளிலும் 1487 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.