tamilnadu

கோவிட்: கேரளத்தில் புதியது 435; தொடர்பு மூலம் 206

திருவனந்தபுரம், ஜூலை 13- கேரளத்தில் ஞாயிறன்று 435பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்பு மூலம் 206 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. 128 பேர்  வெளிநாடுகளில் இருந்தும் 87 பேர் இதர  மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். ஞாயிறன்று கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. கண்ணூர் மாவட்டத்தில் ஒரு டிஎஸ்சி வீரரும் சிஐஎஸ்எப் வீரரும் கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாயினர். சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 132 பேர் குணமடைந்தனர். இதுவரை 4097 பேர் கோவிட்டிலி ருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 3743 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,81,784 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,77,794 பேர் வீடுகள்/ நிறுவனங்களிலும் 3990 பேர் மருத்துவ மனைகளிலும் உள்ளனர். ஞாயிறன்று 633 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  அதே நேரத்தில் பரி சேதனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று காலை வரையிலான  24 மணி நேரத்தில் 13,478 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுவரை மொத்தம் 3,47,529 மாதிரிகள் பரிசோத னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 5944 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. சுகாதாரத்துறை ஊழி யர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 76,075 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 72,070 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.