tamilnadu

img

ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் ஓணம் கொண்டாட நல்வாழ்த்துக்கள்..... கேரள அமைச்சர் எம்.எம்.மணியின் ஓண வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலுமுள்ள மலையாளிகளின் மனதில் மட்டுமல்ல, அனைவரிடமும் ஓணத்திருநாள் கொண்டாட்ட நாட்கள் வந்துசேர்ந்துள்ளன. கொண்டாட்டங்களும் ஆரவாரங்களும் இல்லாமல், கோவிட்-19ன் ஒரு பகுதியாக முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களுடன் வாழுகின்ற காலத்தில் வந்துசேர்ந்துள்ள ஒரு ஓணம் ஆகும் இது. அதிகக் கட்டுப்பாடுகளுடன் நாம் ஓணம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் நோய் பரவலைத் தடுப்பதற்கு நம்மால் இயல வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதுவாழ்க்கையை சாத்தியமாக்குவதற்கு கேரள அரசின் சுகாதாரத்துறை அனைத்து  ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துவருகிறது. யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஓணக் கொண்டாட்டங்களுக்காக வெளியிடங்களிலிருந்து கொண்டுவரும் பூக்கள் மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதினால் அவரவர்கள் பகுதியிலுள்ள பூக்களையும், வீட்டுத்தோட்டங்களில் உள்ள பூக்களையும் பயன்படுத்தவும். பொதுவெளியில் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. ஓணத்தின் உற்சாகத்தை வீடுகளுக்குள் சுருக்கிக் கொண்டு இந்தக் கொண்டாட்ட தினத்தில் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் ஓணம் கொண்டாட உங்களால் இயலட்டும் என வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ஓணம் நல்வாழ்த்துக்கள்.

எம்.எம்.மணி
மின்சாரத்துறை அமைச்சர், கேரளஅரசு

;