கொச்சி, ஆக.11- கோவிட் மற்றும் வெள்ள நிவாரண சிறப்பு முகாமுக்கு பலரும் வீடுகளில் சமைத்த உணவை தன்னார்வ ஊழியர்கள் மூலம் வழங்கி வருகின்ற னர். அதை காவல்துறையினரும் பெற்றுக்கொள் கின்றனர். கொச்சி அருகில் உள்ள கும்பளங்கி முகாமில் அவ்வாறு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தை கண்ணமாலி காவல் நிலை யத்தைச் சேர்ந்த அனில் ஆண்டனி பிரித்தார். அப்போது அதனுள் ஈரம்படாமல் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தில் மடிக்கப்பட்டு நூறு ரூபாய் பாது காப்பாக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த கன்னமாலி ஆய்வா ளர் ஷிஜு‘ இது கோடி ரூபாய் மதிப்புள்ள நுறு ரூபாய் என முகநூலில் பதிவிட்டார். ‘ஒரு பழம் கொடுத் தால்கூட சமூக ஊடகங்களில் பதிவிடும் இந்த காலத்தில் பெறுவோரின் மனம் நோகா வண்ணம் உணவுப் பொட்டலத்தில் நூறு ரூபாய் வைத்த நல்மனதை தலைகுனிந்து வணங்குகிறேன்’ என்கிற அந்த முகநூல் குறிப்பு வைரலானது. இந்த சம்பவம் செய்தி ஊடகங்களிலும் வெளியானதைத் தொடர்ந்து அந்த உணவுப் பொட்டலம் வழங்கிய கும்பளங்கியைச் சேர்ந்த மேரி செபாஸ்டினை காவல்துறையினரும், தன்னார்வலர்களும் தேடிப்பிடித்தனர். அவரைப் பாராட்டி நினைவுப்பரிசும் வழங்கினர். கேரளத்தில் 12 கிலோமீட்டர் கொண்ட முத லாவது சூழல் சுற்றுலா கும்பளங்கி. சுற்றுலாவுக்கு சிறப்பு பெற்ற கும்பளங்கி கோவிட் காலத்தில் நேயத்தாலும் சிறப்பு பெற்றுள்ளது.