திருவனந்தபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பொறுப்பை ஏ.விஜயராகவன் வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தொடர் சிகிச்சை பெற உள்ளதால் விடுப்பு கோரி ஏற்கனவே கடிதம் அளித்திருந் தார். அவரது கோரிக்கையை கட்சியின் மாநில செயற்குழுவெள்ளியன்று பரிசீலித்துவிடுப்பை அனுமதித்துள் ளது. செயலாளர் பொறுப்பைகட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன்வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.