tamilnadu

img

உலக குத்துச்சண்டை போட்டி : வெண்கலம் வென்ற மேரி கோம்

உலக குத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்த மேரி கோம் வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளார்.

உலக குத்துச்சண்டை போட்டியானது ரஷ்யாவின் உலான் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம், கால் இறுதியில் வென்று அரையிறுதி வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி சுற்றில், துருக்கி வீராங்கனை பஸ்னாஸை எதிர் கொண்டு விளையாடினார். இதில் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்த மேரி கோம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்களுடன், அதிக பதக்கங்களை வென்றவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.  

;