tamilnadu

img

நீதித்துறையும் மக்களின் விமர்சனத்திற்கு உட்பட்டதே: நீதிபதி தீபக் குப்தா

அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு, “தேசத் துரோகம் மற்றும் கருத்துச் சுதந்திரம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளார். அதில், அவர் பேசியிருப்பதாவது:

நமது அரசியலமைப்புச் சட்டமானது, கருத்துச்சுதந்திர உரிமையை வழங்கியுள்ளது. அதேசமயம் வன்முறையை தூண்டாத வகையில் மாற்றுக்கருத்தை முன்வைக்க வேண்டும். இதனை மிகமுக்கியமான உரிமையாக நான் கருதுகிறேன். சமூகம் ஏற்றுக் கொண்ட விதிமுறைகள் ஏற்கப்படாத போது, புதிய சிந்தனையாளர்கள் பிறக்கிறார்கள். ஒவ்வொருவரும் வழக்கமான பாதையை மட்டும் பின்பற்றிச் சென்றால், புதியபாதைகள் உருவாக்கப்படாது. நமது சிந்தனையில் புதிய கருத்துகள் தோன்ற வாய்ப்பில்லாமல் போய்விடும். எப்போதும் “ஏன்” என்று கேள்வி எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சமூகம் மேம்படும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் இருப்பர். இவர்கள் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது.அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப் பதை தேசத் துரோகமாகக் கருதக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை,அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால், நமது நாடு சர்வாதிகார நாடாகி விடும். ஜனநாயக நாடாக இருக்க முடியாது.விருப்பு, வெறுப்பு, அச்சமின்றி பொதுமக்கள்தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முழு சுதந் திரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தஉலகம் மக்கள் வாழ்வதற்கு இன்னும் உகந்ததாகஇருக்கும்.தேசத் துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, நமது சுதந்திர போராட்ட வீரர்கள் போராடியகொள்கைக்கு எதிரானது. என்னைப் பொறுத்தவரை நீதித்துறைகூட விமர்சனத்துக்கு அப்பாற் ட்டது கிடையாது. நீதித் துறை மீதான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்.

;