tamilnadu

குஜராத் குடிநீர் வாரியத்தில் ரூ.340 கோடி ஊழல்?

குஜராத் மாநில, குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில், சுமார் 340 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக, அம்மாநிலத்தின் முன் னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, குற்றம் சாட்டியுள்ளார்.

சுரேஷ் மேத்தாவும் பாஜக-வைச்சேர்ந்தவர்தான். நரேந்திர மோடிமுதல்வராக வருவதற்கு முன்பு 1995 அக்டோபர் முதல் 1996 செப்டம்பர் வரை குஜராத் முதல்வராக இருந்தவர். பின்னர் கேசுபாய் படேல் தலை

மையிலான ஆட்சியில் 2002 வரை தொழிற்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால், மோடி வந்த பிறகு, அவரது தலைமையை ஏற்க முடியாது என்று கூறி பாஜகவிலிருந்தே வெளியேறிய அவர், தற்போது, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்னும் குஜராத் அறிவுஜீவிகளின் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ அமைப்பானது, குஜராத் மாநிலத்தின் அரசு துறைகளின் வருடாந்திர கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்து, அதில்,2017-18 ஆண்டில் மட்டும் குஜராத் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் ரூ. 340 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை, கடந்த வெள்ளிக்கிழமையன்று குஜராத் சட்டப்பேரவைக்கும் அனுப்பி வைத்துள்ளது. குடிநீர் வடிகால் வாரிய ஊழல் குறித்து, சுரேஷ் மேத்தா பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், “குஜராத்நீர்வளத்துறை நிறுவனம் ரூ. 502 கோடிஅளவுக்கு குஜராத் குடிநீர் வாரியத்துக்கு பில் அனுப்பி இருக்கிறது; கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான இந்த தொகையில் ரூ. 163 கோடிக்கு மட்டும் குடிநீர் வடிகால் வாரியம் ஒப்புதல் அளித்து, அந்த பணத்தை தரஒப்புக் கொண்டுள்ளது. அப்படியானால், மீதமுள்ள ரூ. 340 கோடிக்கானபில்கள் போலியா? இதற்கு ஏன் குடிநீர்வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை? அந்த நீர் என்ன ஆனது வற்றிப் போய்விட்டதா அல்லது காற்றில் உலர்ந்து விட்டதா? என்று சுரேஷ் மேத்தா கேள்விகளை எழுப்பியுள்ளார். “இந்திய சார்ட்டர்ட் அக்கவுண் டண்ட் நிறுவனம் வழிகாட்டிய கணக்குமுறையை மீறி, இந்த முறைகேடு நடந்துள்ளது: அதுவும் ஒரே வருடத்தில் நடந்துள்ளது; இதற்கு குடிநீர் வாரியமே பொறுப்பேற்க வேண்டும்” எனவும் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.

;