tamilnadu

img

ரூ.1 கோடியே 5 லட்சம் வேண்டுமாம் விவசாயிகளிடம் நஷ்டஈடு கேட்கிறது பெப்சிகோ நிறுவனம்!

அகமதாபாத், ஏப்.25-தாங்கள் லேஸ் (டுயலள) தயாரிக்க பயன்படுத்தும், காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை விவசாயிகள் பயிரிட்டுவிட்டதாகக் கூறி, பெப்சிகோ நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் விவசாயிகளிடம் ரூ. 1 கோடியே 5 லட்சம் நஷ்டஈடும் கேட்டுள்ளது. இது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.பெப்சிகோ நிறுவனம் இந்தியாவில் லேஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் உருளைக் கிழங்கு சிப்ஸ் விற்பனையைச் செய்து வருகிறது.இதற்காக லேஸ் நிறுவனம் அதன் சிப்ஸ்களுக்கு குடு-2027 மற்றும் குஊ-5 ரக உருளைக் கிழங்குகளை பதிவுசெய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனைப் பிறர் பயிரிட உரிமை கிடையாது என்று பெப்ஸி நிறுவனம் 9 விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது நிலத்தில் விளையும் பயிர்களின் விதைகளைப் பதப்படுத்தி மீண்டும் அதைப் பயிர் செய்யத் தங்களுக்கு உரிமை உண்டு என்று கூறுகின்றனர்.இந்த வழக்கில் சிக்கியுள்ள விவசாயிகள், 3 முதல் 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம்செய்து வருபவர்கள். இவர்கள் யாரும்பெப்சிக்கு ஒப்பந்தமாகக் கூட உருளைக்கிழங்கு கொடுத்ததில்லை.இந்நிலையில், மிகப்பெரிய நிறுவனம் தங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதால், அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அந்த நிறுவனம் ரூ. 1 கோடியே 5 லட்சம் இழப்பீடு கேட்டிருப்பதும் விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.எனவே, தங்களுக்கு இப்பிரச்சனையில் தீர்வு கிடைக்க, மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று வடோதராவில் செயல்பட்டு வரும் விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள் ளன.பெப்சிகோ நிறுவனம் லேஸ் தயாரிப்புக்காக இந்தியாவில் ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் உருளைக் கிழங்குகளை கொள்முதல் செய்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

;