சிகாகோ
கொரோனா பரவலை காரணம் காட்டி உலகின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு அரங்கேற்ற தொடங்கியுள்ளது. இதன்படி 19,000 ஆயிரம் பணியாளர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பவும், 30 சதவீத வேலைகளை குறைக்கவும் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1,600 விமானிகள், 8,100 விமான உதவியாளர்கள், 1,500 நிர்வாக பதவிகள் என மொத்தம் 19,000 பேர் வெளியேற்றப்படுகிறார்கள். இவர்களில் 17,500 பேர் தொழிற்சங்கத் தொழிலாளர்கள் என்பதால் என்பது குறிப்பிடத்தக்கது.