tamilnadu

தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கியது குஜராத்தில் ரூ. 500 கோடிக்கு போதைப் பொருட்கள் பறிமுதல்!

அகமதாபாத், ஏப். 9 -மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல்பறக்கும் படையினர், நாடு முழுவதும் தீவிரச்சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 7-ஆம் தேதி வரைதாங்கள் பறிமுதல் செய்துள்ள பணம், நகை,மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட் களின் மதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் ரூ. 500 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும், ரூ. 8 கோடி மதிப்பிலான மதுபானங்களும் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ரூ. 77 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ரூ. 37 கோடியே 68 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும், ரூ. 23 கோடியே 12 லட்சம் மதிப்பிலானபோதைப் பொருட்கள் கைப்பற்றப்பட் டுள்ளன.ஆந்திராவில் ரூ. 22 கோடியே 89 லட்சம்அளவிற்கான மதுபானங்களும், ரூ. 5 லட்சம்மதிப்புள்ள போதைப் பொருட்களும் சிக்கியிருக்கின்றன. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் ரூ. 1 கோடி 73 லட்சம் அளவிற்கேமதுபானங்கள் சிக்கியுள்ளன. போதைப் பொருட்களைப் பொறுத்தவரை அதுவும் ரூ. 27 லட்சம் என்ற அளவிலேயே கைப் பற்றப்பட்டுள்ளது.

;