அகமதாபாத், ஏப்.7-
பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில், காந்தி நகரில்அவருக்கு சொந்தமாகஇருக்கும் வீட்டுமனையை மறைத்திருப்பதாக காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது. அத்துடன் வணிக வங்கியொன்றில் மகனுக்காக வாங்கிய கடன்தொகையையும் அமித்ஷா மறைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.