tamilnadu

img

ரூ.11 கோடியிலிருந்து ரூ.38 கோடி ஆனது அமித்ஷா சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு

காந்திநகர், ஏப்.1- பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தனது சொத்து விவரங் களை அவர் தாக்கல் செய்துள்ளார். இதில், அமித்ஷாவின் சொத்து மதிப்பு, கடந்த 7 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில்அமித்ஷா போட்டியிட்டபோது, அவருடைய மொத்தச் சொத்துக்கள் 11 கோடியே79 லட்சம் ரூபாயாக இருந்தது. இதில் அவருடைய மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பும் அடங்கியிருந்தது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்து 38 கோடியே 81 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் ஜெய்ஷாவின் சொத்துக்கள் இடம்பெறவில்லை. இவை தவிர, தனக்கும், தனது மனைவிக்கும் ஆண்டுக்கு 2 கோடியே 84 லட்சம் வருமானம் வருவதாக தெரிவித்துள்ள அமித்ஷா, மனைவி பெயரில் 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சேமிப்பு, 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை ஆகியன உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

;