குஜராத் மாநிலத்தில் நடந்த வெடிவிபத்தில் 6 பேர் பலியாகினர். 14 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் கோடவுன் பகுதியில் பிற்பகலில் சக்தி வாய்ந்த வெடிவிபத்தில் நடந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், 14 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்டர். 6 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். 10 திற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். விரைந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கான்கிரீட் பலகைகளை உடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. விரைந்து இயந்திரங்களை வரவழைத்து உடைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வெடிவிபத்து குறித்து காவல்துறை அதிகாரி அசோக் முனியா தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், அருகிலுள்ள கட்டிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிப்பின் சிதறல்கள் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவியுள்ளது.