tamilnadu

img

தலித் குடியிருப்புகள் புதுப்பிக்கப்படுமா?

கிருஷ்ணகிரி, ஆக. 5- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் சாலிவாரம் ஊராட்சியில் உள்ள அருளாலம் தலித் மக்களுக்கு 30 வீடு கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்  கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் முற்றிலும் பழு தாகி குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. இவர்கள் தெருவை மறித்து தனியார் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த  மாதம் பெய்த மழையில் இடிந்து விழுந்துள் ளன.  மேலும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உடனடியாக குடியிருப்பு களை புதுப்பித்து, அடிப்படை வசதிகளை  செய்து கொடுக்க வலியுறுத்தி தீண்டாமை  ஒழிப்பு முன்னணி சார்பில் தேன்கனிக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் பட்டாபி, நீலம் பண்பாட்டு அமைப்பின் அசேன் ராஜா, நிர்வா கிகள் சந்துரு, பிரேம்குமார், ராஜா, வட்டச் செயலாளர் கணேசன், அனுமப்பா, சங்கர், சீனிவாசன், ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.