சிறுமிக்கு பாலியல் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி போடிப்பாறை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜ் (19) என்பவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அரிசி பறிமுதல்
திருப்பூரிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்லப்பட்ட 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுனர் ராஜாவை கைது செய்தனர்.
கைது
புதுவை கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே இறைச்சிக் கடை நடத்தி வரும் பாஸ்கர் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மடுவுபேட் பகுதியை சேர்ந்த கார்த்தி (எ)மணிவண்ணன், சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.