கிருஷ்ணகிரி, ஜூலை 8- பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியே கர்நாடகா மாநிலம் தேவனகுந்திக்கு பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்ல குழாய் பதிக்கும் திட்டத்தை ஐடிபிஎல் நிறுவனத்தின் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. இருகூர் முதல் தேவனகுந்தி வரை சுமார் 750 கிலோ மீட்டருக்கு பல லட்சம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன் கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர் வட் டங்கள் வழியே 51 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,200 விவசாயிகளின் 3,200 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த அளவை பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவாக கடந்த அக்டோபர் முதல் ஐடிபிஎல் நிறுவனம் தன் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. விவசாயிகள் தங்கள் நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாது, கேரள மாநிலத்தில் சாலையோரம் பதித்தது போல திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தக் கோரி பலமுறை மறுப்புக் கடிதமும் அனுப்பியுள்ள னர். இந்நிலையில் கடந்த மாதம் ஐடிபிஎல் நிர்வாகம் அனைத்து விவ சாயிகளுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பி ஓசூரில் நேரில் தனி துணை ஆட்சியர் முன்பு ஜூன் 22இல் விசார ணைக்கு வரும்படி கடிதம் அனுப்பி யது. அன்று விவசாயிகளும், சங்க நிர்வாகிகளும் நேரில் கலந்து கொண்டு நிலம் கையகப்படுத்த மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால் மீண்டும் சூளகிரி வட்டத்தில் உள்ள விவசாயிகளை செவ்வாயன்று (ஜூலை 6) நேரில் விசாரணைக்கு அழைத்து மிரட்டல் விடுத்தனர். ஐடிபிஎல் நிர்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்து சாணப்பள்ளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், விவசாய நிலங்க ளில் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவ சாய நிலங்கள் மீது குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை எதிர்து சூள கிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்டத்தின் தனி துணை ஆட்சியரி டம் மனுவும், நிலங்களை எடுக்க மறுப்பு கடிதமும் கொடுக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் பிர காஷ், வட்டத் தலைவர் எம்எம் ராஜூ, செயலாளர் எஸ்.முனியப்பா, ஐடி பிஎல் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப் பாளர் சாந்தகுமார், ஊராட்சித் தலை வர் நஞ்சுண்டன், முன்னாள் தலைவர் சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.