இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 6 மதமாக வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராமசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.