tamilnadu

img

கொரோனா பரவல் எதிரொலி தமிழகத்திற்கு வரும் பிற மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.... ஓசூர் எல்லையில் கொரோனா சோதனை தீவிரம்.....

ஓசூர்:
தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைமையத்தில் கர்நாடக மாநில வாகனங்கள் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு, ஓட்டுநர் உள்ளிட்டவர்களுக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் புதிய விதிமுறைகளுடன் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியஇரு மாநில எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச் சாவடியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி விளங்குகிறது. இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டாம் முறையாக தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் இ-பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வருகிறது.இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறியதாவது:‘’மார்ச் 10 ஆம் தேதி முதல் இயங்கிவரும் இந்த இ-பாஸ் சோதனைச் சாவடியில் முதல் கட்டமாக கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இ-பாஸ்இன்றி தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகஎல்லையிலும் கொரோனா விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்துக்கு வரும் கர்நாடகாஉள்ளிட்ட வெளிமாநில வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள் ளது.

இ-பாஸ் இல்லாத வெளிமாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.இந்த சோதனைச் சாவடியில் மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக தமிழகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிப்புப் பணி மேற்கொள் ளப்பட்டு, ஓட்டுநர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;