tamilnadu

கொரோனா சோதனை செய்தவர்களை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

திண்டுக்கல், ஜூலை 19- கொரோனா சோதனை செய்த வர்களை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் திண்டுக்கல் மாவட்டச் செய லாளர் முபாரக் அலி, மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் மனு அளித்துள்ளனர். மனுவில், “பணியில் ஈடு பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு என்.95 அல்லது மூன்றடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் வழங்க வேண்டும். பி.பி.இ. கிட் தொட ர்ந்து வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும்.  கொரோனா தொற்றுக்கான சோதனை மையங்களில் மாதிரி களை எடுத்து சோதனை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பும் நிலை உள்ளது. ஆனால் அந்த நபர் கள் வீட்டிற்குச் செல்லாமல் வெளியில் தங்கிக்கொள்கிறார் கள்.  பலர் தங்களது வீடுகளுக்கே செல்கிறார்கள். ஒரு வேளை அவர் களுக்கு பாசிட்டிவ் இருப்பதாக முடிவு வந்தால் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவினர் களுக்கும், பிறருக்கும்  தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.  

கொரோனா பாதித்த நோயா ளிகள் உள்ள வார்டுகளில் நோய் கிருமிகளை அகற்ற தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பதை உறு திப்படுத்த வேண்டும்.  தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள், குடிநீர் வழங்க வேண்டும். சுத்தமான கழிப்பறைகளை அரசு உத்தர வாதப்படுத்த வேண்டும்.  வைரஸ் தொற்றுக்கு ஆளான அரசு ஊழியர்களுக்கு தனி அறை யில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் கூடு தல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கூடுதலான வார்டுகள் ஏற்படுத்தவேண்டும்.  கொரோனா சிகிச்சை பெற இரண்டு தனியார் மருத்துவ மனைகள் அனுமதிக்கப்பட்டுள் ளது.  இன்சூரன்ஸ் திட்டம் மூலம் நிவாரணம் வழங்கவும் உத்தர விடப்பட்டுள்ளது. அந்த மருத்துவ மனைகளில் தொற்று பாதித்த அரசு ஊழியர்களை அனுமதித்து சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்  சமூக ஊரடங்குக்குப் பிறகு 33 சதவீத அரசு ஊழியர்கள் ஒரு சுழற்சி முறையிலும், 50 சத வீதம் அரசு ஊழியர்கள் இன் னொரு சுழற்சி முறையில் பணி யாற்ற தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. அந்த அடிப்படை யில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்று வதை உறுதிப்படுத்த வேண்டும். 

;