திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் மணப் பாறை ஒன்றியம் வையம் பட்டியில் சிஐடியு ஆட்டோ ரிக் ஷா ஓட்டுநர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா வியாழனன்று நடை பெற்றது. விழாவிற்கு கிளை செயலாளர் வீர மணி தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியு புறநகர் மாவட்ட செய லாளர் சிவராஜ் ஏற்றினார். சங்க பெயர் பலகையை ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சம்பத் திறந்து வைத்தார். விழாவில் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நவமணி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் சாலையோர வியாபாரிகள், கட்டுமானம், ஆட்டோ சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் மகேஷ் நன்றி கூறினார்.