கிரிக்கெட் உலகில் நியூஸிலாந்து மைதானங்கள் சற்று வித்தியாசமானவை. குளிர் பகுதியாக இருந்தாலும் பிட்ச் பகுதி மந்தமாக இருக்கிறதா? கடினமானதாக இருக்கிறதா? என்பதை அறிய கடும் சிரமம் ஏற்படும். சொல்லப்போனால் எல்லாப் பந்துகளும் பவுன்சராக எகிறினாலும், எதிர்பார்த்த வேகத்தில் எகிறாது. இதில் ஒரு கொடுமையான விஷயமும் உள்ளது. நியூஸிலாந்து நாடு பரப்பளவில் சிறியது என்பதால் அங்கு இருக்கும் மைதானங்களும் மிகச்சிறியது தான். லேசாகத் தூக்கி விளாசினாலும் எளிதாக சிக்ஸர் நோக்கி பறந்துவிடும். 400 ரன்களை கூட இங்குள்ள மைதானத்தில் எளிதாக சேசிங் செய்து விடலாம்.சிறப்பாக பந்து வீசினால் 100 ரன்களுக்குள்ளும் சுருட்டி விடலாம். இங்குள்ள ரசிகர்கள் அமைதியாகப் போட்டியை ரசிப்பதால் அனைத்து நாட்டவரும் தங்கள் நாட்டு இருப்பிடமாக நினைத்து சிரமமின்றி போட்டியைக் கண்டுகளிக்கலாம்.