tamilnadu

img

உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடை பெற்று வருகிறது.ஆடவர் 10 மீ., ஏர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 242.7 புள்ளிகள் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்ய வீரர் ஆர்டம் செர்னோசோவ் (240.4புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும், தென்கொரிய வீரர் சியுங்வூ ஹான்(220.0 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியத்துப்பாக்கி சுடுதல் அணியில் அபிஷேக் வர்மா சிரமமின்றி இடம்பிடித்துள்ளார். மேலும் அஞ்சும்மோட்கில், அபூர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி, திவ்யன்ஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதைஉறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;