tamilnadu

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 8-வது சீசன் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரமான லயானில் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அரையிறுதியில் தோல்விகண்ட ஸ்வீடன் - இங்கிலாந்து அணிகள் மூன்றாவது இடத்திற்காகச் சனியன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு நடைபெறுகிறது. அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதும் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது.