tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 இன்றைய ஆட்டம்

இங்கிலாந்து  - ஆஸ்திரேலியா

இடம் : லார்ட்ஸ் (லண்டன்)  
நேரம் : பிற்பகல் 3 மணி

வெற்றி  50% : 50% வாய்ப்பு

♦இரு அணிகளும் சமபலத்தில் இருந்தாலும் ஆளுக்கொரு பிரிவில் பலம், பலவீனத்தைப் பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி பேட்டிங்கிலும், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. சில சமயங்களில் இரண்டு பிரிவுகளிலும் சொதப்பி வருவதால் இந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்வி பற்றி கருத்து கூற முடியாது.  

மழை   30% வாய்ப்பு

லண்டன் நகரில் வானிலை மந்தமாக உள்ளது. மதியம் 1 மணி வரை 27 டிகிரி செல்ஸியஸ் அளவு வெயில் சுட்டெரிக்கும். பிற்பகல் 2 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆடுகளம் எப்படி? 
இங்கிலாந்து நேரப்படி காலை நேரங்களில் இந்த ஆடுகளம் மந்தமாக இருக்கும். இந்நேரத்தில் பந்துவீச்சைக் கவனமாக ஆராய்ந்தால் ரன் வேட்டை நிகழ்த்தலாம். பிற்பகல் நேரங்களில் குளிர் காற்று வீசுவதால் ஆடுகளம் அதிக உயிரோட்டத்துடன் காணப்படும். இதனால் சேஸிங் செய்யும் அணிகளுக்குச் சிக்கல் உருவாகும். டாஸ் வெல்லும் அணிகளுக்கு லார்ட்ஸ் நல்ல பலனை அளிக்கும்.