tamilnadu

img

இன்றைய ஆட்டம் 

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் 
இடம் : சவுதாம்ப்டன் 
நேரம் : பிற்பகல் 3 மணி 

வெற்றி :50%  :   50% வாய்ப்பு  

இரு அணிகளும் சமபலத்தில் உள்ளதால் வெற்றி வாய்ப்பு குறித்து ஆருடம் கூற முடியாது என்றாலும், அனுபவத்தில் வங்கதேச அணி சீனியராக இருப்பதால் அந்த அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக வங்கதேச அணிக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி பற்றிச் சிந்திக்க  முடியும். ஆப்கானிஸ்தான் அணி  இதுவரை பங்கேற்ற 6 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்த தால் அரையிறுதி சுற்றை இழந்து ஆறுதல் வெற்றியை ருசிக்கப் போராடி வருகிறது. இருப்பினும் 28-வது லீக் ஆட்டத்தில் பலமான இந்திய அணியைத் திணறவிட்ட நம்பிக்கையில், ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குவ தால் வங்கதேச அணி ஜாக்கிரதையாக விளையாடுவது நல்லது.

மழை 35%  :   50% வாய்ப்பு  

இங்கிலாந்து நாட்டின் தெற்கு நகரமான சவுதாம்ப்ட னில் குளிர்ந்த காலநிலை  மாறி வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் மதிய நேரங்களில் வானம் மேகக்கூட்டத்துடன் காணப்படுவதால் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.