இங்கிலாந்து நாட்டில் குளிரும், வெப்பமும் சரிசமமாக இருக்கிறது. பவுன்சர் பந்துகள் பெரும்பாலும் முகத்திற்குத் தான் எகிறுகிறது. தாழ்வாக வீசினாலும் வீரர்களின் தொண்டை வரை எழும்புகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசியஷார்ட் வகை பந்துவீச்சு தென் ஆப்பிரிக்க வீரர் அம்லாவின்தலையைப் பதம் பார்த்தது. பாகிஸ்தான் வீரர்களும் பவுன்சர்களை விரும்பி வீச மாட்டார்கள். ஆனால் விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வீசிய ஸ்விங் பந்துகள் கூட தாறுமாறாக எகிறியது. தற்போதுள்ள சீதோஷ்ண நிலை மாறாமல் இதே நிலை தொடர்ந்தால் வீரர்கள் அதிகளவில் காயத்தில் சிக்குவார்கள்.