குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள்
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந் தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டம் ஆன்டிகுவா மைதானத்தில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ரஹானே (81), ஜடேஜாவின் (58) அசத்தலான ஆட் டத்தால் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய விண்டீஸ் அணி இஷாந்த் சர்மா (5 விக்.,) வேகத்தைச் சமாளிக்க முடியாமல் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக் கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து திண றியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடை வேளைக்குப் பின் டேரன் பிராவோவை பும்ரா வெளியேற்றினார். இந்த விக்கெட்டை வீழ்த்தி யதன் மூலம் பும்ரா (11 டெஸ்ட்) குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டிய லில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஒட்டு மொத்த இந்திய பந்துவீச்சாளர் களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ் வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.