tamilnadu

img

2019 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

உலகக்கோப்பைக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கை அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. இதில் நான்கு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் விளையாடாத கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் பட்டியலில், கருணாரத்னே, அவிஷ்கா பெர்னாண்டோ, திரிமன்னே, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், மேத்யூஸ், டி சில்வா, வாண்டர்சே, திசாரா பேரேரா, உடானா, லசித் மலிங்கா, லக்மல், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ், ஸ்ரீவர்தனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


;