tamilnadu

img

ஆடை இல்லாமல் கீப்பிங் பெண்களுக்கான விழிப்புணர்வு இயக்கத்தில் சாரா

பெண்களுக்கான விழிப்புணர்வு இயக்கத்தில் சாரா

மகளிர் கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான சாரா டெய்லர் டெஸ்ட் போட்டிகளை விரும்பி விளையாட மாட்டார் என்றாலும் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரன் மழை பொழிந்து பந்தை ஜூஸ் போடுவதைப் போல பிழிந்துவிடுவார்.     கடந்த ஒருமாதமாக ஓய்வில் உள்ள சாரா மன அழுத்தம் மற்றும் கவலைகளிலிருந்து மீள விழிப்புணர்வு பரப்பி வரும் இதழுக்கு (@WOMENSHEALTHUK) ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் செய்வது போல புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தனது சமுக வலைத்தள கணக்கு களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சாராவின் வித்தியாசமான விழிப்புணர்வுக்குப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் சற்று ஆபாசமாக இருந்தாலும் ஆன்லைன் ஆர்மிகள் பகிர்ந்து சாராவை பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் சாராவின் புகைப்படத்தைத் தனது அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து விழிப்புணர்வு இயக்கத்தில் நுழைந்துள்ளது. தற்போது சாராவின் விக்கெட் கீப்பிங் புகைப்படம் தான் டாப் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.