tamilnadu

img

ஐபிஎல் 2019 : டெல்லி அணியை 40 ரன்களில் வீழ்த்திய மும்பை அணி

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 34-வது லீக் ஆட்டத்தில், டெல்லி அணியை 40 ரன்களில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் 34-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியின் குர்னல் பாண்டியா 26 பந்துகளில் 37 ரன்களும், ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களும் சேர்த்தார். டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 128 ரன் எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. டெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ரன்களும், தவான் 35 ரன்களும், அக்சார் பட்டேல் 26 ரன்களும் சேர்தனர்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியின் மூலம், டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா(8,216), கோலி (8,183) ரன்கள் சேர்த்துள்ளனர். அதேபோல டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் போட்டியில் 150-வது விக்கெட்டை வீழ்த்திய 2-வது வீரர் என்னும் சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் 115 போட்டிகளில் 161 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை வீரர் மலிங்கா உள்ளார்.



;