tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதைய விளையாட்டு உலகில் அன்பு, பண்பு, பாசம், அடக்கம் என அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள ரசிகர்கள் கூட்டம் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே உள்ளது. அது கிரேட் பிரிட்டனின் ஒரு பகுதியாக  இருக்கும்  இங்கிலாந்து நாட்டின் விளையாட்டு ரசிகர்கள் தான். எந்த விளையாட்டு போட்டிகளாக இருந்தாலும் அமைதியாகப் போட்டியை ரசிப்பார்கள். கிரிக்கெட்டில் சதமடித்தாலோ, கால்பந்தில் கோலடித்தாலோ இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அமைதியா 3 மூன்று முறை கைதட்டுவார்கள். தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்கள் மட்டு மின்றி மற்ற நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த இந்த மரியாதை கிடைக்கும். ஆனால் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மேற்கு இந்தியத்தீவுகள் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு ரசிகர்கள் இங்கி லாந்து ரசிகர்களுக்கு எதிர்மறையாகச் செயல்படுவார்கள். இந்த இரண்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் இருக்கையில் பெரும்பாலும் அமரமாட்டார்கள். கங்காரு குட்டியைப் போன்று அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருப்பார்கள்.