இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள கிரன் போலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இத்தொடருக்காக இந்திய அணியின் வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களும் நேற்று தனித்தனியாக தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர்.