tamilnadu

img

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் : ஆஸி., நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் பகல் ஆட்டமாக வியாழனன்று துவங்கியது.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறுவதால் ‘பாக்ஸிங் டே’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் (0) நியூஸிலாந்து வீரர் பௌல்ட பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே வெளியேற, டேவிட் வார்னர் (41) - லபுஸ்சாக்னே (63) ஜோடி அணியை  சரிவிலிருந்து மீட்டது. 

இந்த ஜோடி வெளியேறிய பின்பு வாடே (38) ஓரளவு ரன் சேர்த்தார். அவரும் பெவிலியன் திரும்ப ஸ்மித் பொறுப்பை  உணர்ந்து  நிதானமாக ரன் சேர்க்க, அவருக்குப் பக்கபலமாக டிராவிஸ் ஹெட் மேலும் விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொண்டார்.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தது. ஸ்மித் (77), டிராவிஸ் ஹெட் (25) ஆகியோர் ஆட்டமிழக்கா மல் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து அணி தரப்பில் கிராந்தோமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெள்ளியன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

;