tamilnadu

img

ஆஸி., - நியூஸி., மோதும் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் இன்று தொடக்கம்

கிறிஸ்துமஸ் விழா வுக்கு மறுநாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி களை மேலைநாடுகளில் ‘பாக் ஸிங் டே’ என்று பெயர். இவ்வாறு குறிப்பிடப்படும் டெஸ்ட் போட்டிகள் உல கக்கோப்பை இறுதியாட்டம் போன்று பரபரப்பாக நடை பெறும் என்பதால் இதற்கு தனி செல்வாக்கு உண்டு. எனி னும் ஆஸ்திரேலிய நாடு மட் டும் இந்த ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியை தனி விருப்பத்து டன் கொண்டாடி விளையாடு வதால் அந்த நாட்டிற்கும் பாக் ஸிங்  டே விற்கும் தனி உறவும் கூட உள்ளது.  இந்நிலையில் ஆஸ்தி ரேலியாவிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள நியூ ஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) ஆஸ்தி ரேலியா 296 ரன்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்ற நிலை யில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் பகல் ஆட்டமாக வியாழனன்று தொடங்குகிறது.   இந்த டெஸ்ட் போட்டி கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறு வதால்  ‘பாக்ஸிங் டே’ என்ற பெயரில் நடைபெறவுள்ளது. தொடரில் முன்னிலை பெறா விட்டாலும் பரவாயில்லை ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட் டியில் கண்டிப்பாக வெற்றி யை ருசிக்க வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி களும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த பர பரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப் படி காலை 5:30 மணிக்கு (போட்டி தொடங்க ஏறக் குறைய 6:15 ஆகிவிடும்) தொடங்குகிறது. சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளி பரப்பு செய்கிறது.

;