tamilnadu

img

இன்னும் 13 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

12-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியைப் பற்றி இன்று பார்க்கலாம். 

கேப்டன் : இயான் மார்கன்

பேட்ஸ்மேன்கள் : இயான் மார்கன், ஜோ ரூட், ஜேசன் ராய் 

ஆல்ரவுண்டர்கள் : பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜோ டென்லி, கிறிஸ் வோக்ஸ், டாம் குரான், டேவிட் வில்லே.

விக்கெட் கீப்பர்கள் : ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் 

பந்துவீச்சு : லியம் பிளன்கட், அடில் ரசித், மார்க் வுட் 

சிறப்பு : பேட்டிங் தான் இங்கிலாந்து அணியின் முக்கிய பலம். டாப் ஆர்டரை எப்பொழுதுமே பலமாக வைத்துக்கொண்டு எதிரணி பந்துவீச்சாளர்களை நடுங்க வைக்கும். தொடக்கம் சிறப்பாக அமைந்தால் 400 ரன்களை கூட சேசிங் செய்வார்கள். 138 கிமீ ஸ்விங் செய்வதே கடினமான விஷயம் என்றாலும் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளர்கள் 147 கிமீ வேகத்திலும் ஸ்விங் செய்து அசத்துவார்கள். நல்ல பார்மில் இருந்தால் 11 வீரர்களும் பேட்டிங் செய்து சிக்கலான நேரத்தில் கைகொடுக்கும் திறன் உடையவர்கள். 

வீரர்கள் தேர்வு எப்படி?

இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் அனைவரும் சூப்பர் பார்மில் உள்ளனர். பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.முக்கிய ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், டாம் குரான் ஆகியோர் பகுதி நேரத்தில் சொதப்பும் திறன் உள்ளவர்கள். 

பலம்: சொந்த மண், உள்ளூர் ரசிகர்கள், சீதோஷ்ண நிலை ஆகியவை இங்கிலாந்து அணியின் முக்கிய பலமாக கருதப்படுகிறது.மிடில் ஆர்டர் வீரர்கள் ஸ்ட்ரிக் ரேட்டில் கவனமாக இருப்பார்கள் என்பதால் ரன் வேட்டைக்காக ஒவ்வொரு ஆட்டத்திலும் எதிரணிக்கு தூண்டில் போடுவார்கள். பவுன்சர், யார்கர் பந்துகளை நன்கு ருசிப்பார்கள் என்பதால் பேட்டிங்கில் அனல் பறக்கும்.  

பலவீனம் : முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்துவிட்டால் பந்துவீசும் போது மெத்தனமாக விளையாடி வெற்றியைக் கோட்டை விடுவார்கள். பிட்சின் மையத்தை மாற்றாமல் ஒரே ஷார்ட்டில் டெலிவரி செய்வார்கள். பீல்டிங்கில் துடிப்பாக இருக்கமாட்டார்கள். டெத் ஓவர் என்னவென்று தெரியாதது போல பந்துவீசுவார்கள். பதற்றமான சூழலில் வெற்றியைக் கோட்டை விடுவார்கள். எந்த போட்டியாக இருந்தாலும் பேட்டிங்கில் டி -20 போட்டியைப் போல வெளுத்து வாங்குவார்கள்.இல்லையென்றால் விரைவாக பெவிலியனுக்கு திரும்பி ஓய்வு எடுப்பார்கள்.  

மாற்ற வேண்டியவை : கத்துக்குட்டி அணிகளிடம் கவனமாக விளையாட வேண்டும். பந்திற்கான பிட்சின் வகைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். எகிறும் பந்துகளை ஆஸ்திரேலிய, நியூசிலாந்து,தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள் என்பதால் அந்த வகையான பந்துவீச்சு முறையை அதிகம் வீசாமல் யார்கர் வகையான பந்துவீச்சு முறையைப் பயன்படுத்தலாம். 

உலகக்கோப்பையில் எப்படி?  

இங்கிலாந்து அணியின் முக்கிய வில்லன் ஆஸ்திரேலிய அணியாகும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வியூகம் வகுத்தாலே கோப்பை கனவு குறித்து ஓரளவு சிந்திக்கலாம். மேலும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடம் இங்கிலாந்து அணி சற்று திணறும்என்பதால் அரையிறுதி வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம். குறிப்பாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இங்கிலாந்து அணியிடம் மகிழ்ச்சியான ஆர்வத்துடன் விளையாடும் என்பதால் இங்கிலாந்துஅணிக்கு கூடுதல் சிக்கல் ஏற்படும். சொந்த மண்ணில் முதன் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றும் நோக்கில் அணி வீரர்கள் புதிய வியூகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருவதால் இங்கிலாந்து அரையிறுதி வரை சிரமமின்றி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


நாளை இந்தியா...