tamilnadu

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 

முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 8-வது சீசன் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரமான லயானில் நடைபெற்று வருகிறது. முன்னணி அணிகள் சொதப்பப் புதனன்று நடை பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அமெரி க்க அணி, இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருபோட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்வீடன் அணிகள் மோதின. வியாழனன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 1-0 (கூடுதல் நேரத்தில்) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அமெரிக்கா - நெதர்லாந்து அணி கள் மோதும் இறுதிப்போட்டி வரும் ஞாயிறன்று (ஜூலை 7) நடைபெறு கிறது. 3-வது இடத்துக்கான போட்டி சனியன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ஸ்வீடன்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.